புதிதாக 477 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. 477 பேரில் 81 பேர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்தும் 7 பேர் குஜராத் மற்றும் ஒருவர் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் ஆவர். 4 பேர் வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 477 பேரில் 303 பெண்கள் மற்றும் 174 ஆண்கள் உள்ளனர்
அதிகபட்சமாக சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தில் 13 பேரும், திருவள்ளூரில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 7 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.