நாள் ஒன்றுக்கு 47 டன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது.. தமிழக சுகாதாரத்துறை கையாளும் முறை என்ன?

கொரோனாவுக்கான சிகிச்சை மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது… தமிழக சுகாதாரத்துறை கையாளும் முறை என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 47 டன் மருத்துவக் கழிவுகள் வெளியாவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா மருத்துவக் கழிவுகளைக் கையாளும் பணியாளர்களுக்கு தற்காப்பு உடைகள் , முகக் கவசம், பாதுகாப்புக் கண்ணாடிகள், கையுறைகள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை என 4 வகையாக பிரித்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன், தேரனிராஜன்…

தினமும் சென்னையில் அரசு மருத்துவமனைகளில் இருந்து மட்டும் 480 கிலோ கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இவைகள் சரியான முறையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளதா என கண்காணிக்க செவிலியர்கள், மைக்ரோபயாலஜிஸ்டுகள் என 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கழிவுகள் அகற்ற தமிழக அரசு கிலோவிற்கு 44 ரூபாய் செலுத்தி அப்புறப்படுத்தப்படுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் எவ்வித உடல் உபாதைகளுடனும், இனை நோய்களுடன் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால், அவர்கள் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்கின்றனர், சுகாதாரத்துறை அதிகாரிகள்…

தினமும் வெளியாகும், கொரோனா மருத்துவக் கழிவுகள் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, லாரி மூலம், மதுராந்தகம் பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகள் அகற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, எரிப்பது மற்றும் புதைப்பது என இரண்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர்.

நியூஸ் ஜெ. செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர்கள் யோசேப் மற்றும் புவனேஷ் வுடன் செய்தியாளர் குணா…

Exit mobile version