இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு

இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் 44 வது மாநில மாநாடு சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் இருந்து 1, 200 குழந்தைகள் நல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்டு பேசிய டாக்டர் சீனிவாசன், புதிய தடுப்பூசிகள் பற்றியும், குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய்கள் பற்றியும், அவற்றை சரி செய்யும் புதிய சிகிச்சை முறைகள் பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் லூக் ரவி செல்லையா பேசுகையில், மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல விதமான பிரச்சனைகள் இருக்கின்றன என்றும், அவற்றை பேச்சுவர்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள் அன்பாக பழகுங்கள் என்றும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும் வகையில் டாக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version