வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மார்த்தாண்டம் அருகில் உள்ள கல்தொட்டி பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது வீட்டின் அருகே சிறிய நகை பட்டறை வைத்துள்ளார் . இந்த நிலையில் கிருஷ்ணன்,பேத்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்குச் சென்ற சமயத்தில் வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 44 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது . சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஓரா
உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version