உலகளவில் 44.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு…

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1772 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 71 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 2 லட்சத்து 42 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 29 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பிரேஸில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேரும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக, 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

Exit mobile version