தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 343 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 4 ஆயிரத்து 343 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 551 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 792 பேர் பெண்கள் என்றும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 62 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 21ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 47 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 57 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 273 பேரும், செங்கல்பட்டில் 171 பேரும், திருவள்ளூரில் 164 பேரும், திருவண்ணாமலையில் 170 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சியில் 139 பேருக்கும், வேலூரில் 138 பேருக்கும், ராணிப்பேட்டையில் 127 பேருக்கும், ராமநாதபுரத்தில் 117 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 112 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.