பிரதமர் மோடி மேற்கொண்ட மூன்று முக்கிய நடவடிக்கை மூலம் அவரது ஆதரவு அதிகரித்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. லோக்நிடி- சிஎஸ்டிஎஸ் இணைந்து கடந்த மார்ச் மாதம் ஆய்வு ஒன்றை நடத்தின. இதில், 43 சதவீதம் பேர் மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு வெறும் 24 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பால்கோட்டில் இந்தியா நடத்திய தாக்குதல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் விவசாயிகளுக்கான நிதித் திட்டம் அறிவிப்பு போன்றவை மூலம் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஏழைகளுக்கு குறைந்தப்பட்ச வருவாய் உறுதி திட்டம் மற்றும் ரஃபேல் தொடர்பான காங்கிரஸின் பிரசாரங்கள் போன்றவை மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.