மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், சென்னை செல்ல பயணிகள் வசதிக்காக கடந்த 1977 ஆகஸ்ட் 15 ல் துவங்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தின் முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலான வைகை எக்ஸ்பிரஸ், ஒரு வழி பயண தூரமாக தினசரி 497 கிலோ மீட்டர் மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் ஆண்டுதோறும் தோராயமாக 1 கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், ரயிலுக்கு பிறந்த நாள் கொண்டாடிய ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற எஞ்சின் ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் ரயில் ஆர்வலர்களும் மதுரை சந்திப்பில் உள்ள பணியாற்றும் பல்வேறு துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மதுரை ரயில்வே துணை பொது மேலாளர் ஓபி.ஷா மற்றும் நிலைய இயக்குனர் சச்சின் குமார் மக்கள் தொடர்பு அதிகாரி வீராச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.