தமிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக 4,28,015 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது முதல், காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4 லட்சத்து 54 ஆயிரத்து 16 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version