பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்-சர்வதேசநீதிமன்றம்

பாகிஸ்தானுக்கு 41 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானினில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த டிசிசி என்கிற கூட்டு நிறுவனத்துக்கு சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்தது. இதை எதிர்த்து, அந்நிறுவனம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசுக்கு 5 புள்ளி 97 பில்லியன் அமெரிக்க டாலரை சர்வதேச நடுவர் நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Exit mobile version