புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் 41 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தால் 41 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டிருப்பதாக 15வது படைப்பிரிவின் கமாண்டரான லெப்டினெண்ட் ஜெனரல் தில்லான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பு ஆண்டு மட்டும் 69 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும், 12 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 25 பேர் உட்பட 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதில் 13 பேர் பாகிஸ்தானியர்கள் என்று சுட்டிக் காட்டிய லெப்டினென்ட் ஜெனரல் தில்லான், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அறிவித்தார்.

Exit mobile version