மேலூர் அருகே நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் மீன்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரி கண்மாயில் ஆண்டுதோறும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளாமான பொதுமக்கள் பங்கேற்று மீன்பிடித்து மகிழ்ந்தனர். மீன்பிடி உபகரணங்களான கச்சா, வலை, ஊத்தா உள்ளிட்டவைகளை கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர்.
அப்போது நாட்டுவகை மீன்களான கட்லா, சிலேப்பி, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். ஆண்டுதோறும் இதுபோன்று மீன்பிடி திருவிழா நடத்துவதால் வருடந்தோறும் நல்லமழை பெய்யும் என்பது இப்பகுதிமக்களின் நம்பிக்கையாக உள்ளது.