மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில், 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாயில் மீன்பிடித்து தங்களது இல்லங்களில் பூஜை செய்து கடவுளுக்கு படைத்தால், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதில் சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை கண்டுகளிக்கவும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இந்த ஆண்டு கண்மாய் நன்கு நிரம்பியதால், இதுவரை இல்லாத அளவில், 4 கிலோ எடை வரை உள்ள மீன்கள் அதிகளவில் வலைகளில் சிக்கியது. இதுவும் திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியது.