பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற எருதாட்டத்தில் 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, வருதாபுரம் ஏரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருதாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

எருதாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 காளைகள் பங்கேற்றன. எருதாட்டத்தில், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை, கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் பிடித்து விளையாடினர்.

3 மணிநேரமாக நடைபெற்ற இந்த எருதாட்டத்தை காண ஜோதிபள்ளி, தியாகரசனபள்ளி, காமன் தொட்டி, பர்த்தகோட்டா, உத்தனபள்ளி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர்.

Exit mobile version