திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதால், மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஸ்ரீராம்பூரில் பிரதமர் மோடி வாக்குச் சேகரித்தார். பிரமாண்ட கூட்டத்தில் பேசிய அவர், மே-23ஆம் தேதிக்கு பிறகு நாடுமுழுவதும் தாமரை மலரும் என்றார். மேற்கு வங்காளத்திலும் தாமரை மலரும் எனத் தெரிவித்த அவர், அதற்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் மம்தா பானர்ஜியை விட்டு விலகி வருவார்கள் என்றார். தற்போதே தன்னுடன் 40 திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.