புகைப்பழக்கம் குடிப்பழக்கம் முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால் இந்தியாவில் 40 விழுக்காட்டுக்கு மேலான ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரமாக சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா வளர்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நீரிழிவு நோய்க்கு அடுத்தபடியாக, ஆண்மை, பெண்மை குறைவால், இந்தியாவில் சுமார் 40 விழுக்காட்டினருக்கு மேல் பாதித்தி இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு இருவர், ஒரு குடும்பம் ஒரு வாரிசு, நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர் என்றெல்லாம் அரசின் சார்பில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்றோ திருமணமான தம்பதிகளுக்கு குழந்தையின்மைப் பிரச்சனை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கு காரணம் சரியான உணவு பழக்கவழக்கங்கள் இல்லாதது, போதிய அளவில் உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படுவதற்கு போதைப்பழக்கம் ஒருபுறம் என்றால், செயற்கையாக தயார் செய்யப்படும் குளிர் சாதனப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவது, ஓட்டல்களில் துரித உணவுகளை சாப்பிடுவது மற்றொரு காரணமாக உள்ளது. வயது கடந்த திருமணமும் ஆண்மைகுறைவு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் திருத்தணிகாசலம்.
ஜப்பான், சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் உடல் உழைப்புக்கும் இயற்கை சார்ந்த உணவுகளை சாப்பிடுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இந்தியாவிலோ உடல் உழைப்பையும், இயற்கை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதிலும் போதிய அளவில் நம் நாட்டினர் ஆர்வம் கொள்வதில்லை. இன்றைய பரபரப்பான இயந்திர
வாழ்க்கையில் தேவைக்கேற்ப சம்பாதிப்பதே, அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தத்தை குறைத்து, இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு, வீட்டுக்கு தேவையான பதினாறு செல்வங்களை பெற்று இன்பமாக வாழ முடியும்.