பெரம்பலூரில், தேசிய நெடுஞாசலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் என்ற இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதைத் தொடர்ந்து, பின்னே வந்த லாரி, அரசு விரைவு பேருந்து, அரசு பேருந்து என அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக 4 வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அரசு விரைவுப் பேருந்து ஒட்டுநர் மாரிமுத்து என்பவரும், அந்த பேருந்தில் பயணம் செய்த சுரேஷ் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், காயமுற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.