நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், தடை செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடையநல்லூரில் முருகாநந்தன் என்பவருக்கு சொந்தமான தனியார் குடோனில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள், சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குடோன் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.