பட்டப்பகலில் மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

வேலூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை நவநீதம் ஆம்பூர் பைபாஸ் சாலை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்காக அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயற்சிக்கும் போது சேலம் மாவட்டம், அயோத்திப் பட்டணம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் நவநீதம் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது பொதுமக்கள் பிடித்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version