காதல் திருமண விவகாரம் : கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த இளமதி காவல்துறை விசாரணைக்கு பிறகு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த பட்டதாரியான இளமதி, செல்வன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி, திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன், சுமார் 40 பேருடன் சென்று செல்வன் மற்றும் ஈஸ்வரனை தாக்கி மகளை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஜெகநாதன் உள்பட 18 பேர் மீது  10 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காவல்நிலையம் வந்த இளமதியிடம் அதிகாரிகள் சுமார் 6  மணி நேரம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து காதலன் செல்வனை சந்திக்க இளமதி மறுத்து விட்டார். பெற்றோருடன் செல்ல இளமதி விருப்பம் தெரிவித்ததால், அவர் தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Exit mobile version