திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து வேலூர் வழியாக திருப்பதிக்கு ஒரு கும்பல் செம்மரம் வெட்ட வருவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருப்பதி அடுத்த சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் கோடாரி அரிவாள் போன்ற ஆயுதங்களும் இருந்ததாகவும் செம்மரம் வெட்ட தான் அவர்கள்வந்தார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதிக்குள் செல்லாததால் நல்லெண்ண அடிப்படையில், திருப்பதி தாசில்தார் முன்னிலையில் விடுவிக்கவுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.