மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தானேவின் கவுசா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மருத்துவமனையின் முதல் தளத்தில் தீப்பற்றி நிலையில் அங்கிருந்த 20 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் 6 பேர் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா நோயாளிகள் இருந்த வார்டில் தீ விபத்து ஏற்படவில்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் மகாராஷ்டிர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.