உதித் சூர்யா போன்று மேலும் 4 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை 15 நாட்கள் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய 6 பேரில், 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிகிறது.
ஆள் மாறாட்டம் செய்த 6 பேரில், தற்போது கைதாகியிருக்கும், உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனின், நண்பர் மகனும், ஆள்மாறாட்டம் செய்து, தனியார் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து, சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.