தென்காசி பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 4 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பறக்கும் படையினர் ஒரே நாளில் 3 பேரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version