ஒசூரில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஜீவா.
இவரும் இவரது சகோதரிகளான வசந்தா, கலா ஆகியோரும் அடுத்தடுத்து வீடுகள் கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், வசந்தாவின் மகன் லோகேஷுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஒரே வீட்டில் இருந்ததால் ஜீவா, வசந்தா, கலா ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியானது.
நால்வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கலாவின் மகன் பாபுவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
லோகேஷ் மட்டும் குணமடைந்த நிலையில், மற்ற நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.