கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் 14 வயது மகள் சுபஸ்ரீ, பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதேபோல அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர், நேற்றிரவு உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேட்டுபாளையத்தை சேர்ந்த போத்திராஜ் மற்றும் சேலத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காய்ச்சல் காரணமாக திருப்பூர், நீலகிரி ,கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.