டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் சரணடைந்தவர்களுக்கு 4 நாட்கள் காவல்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் சரணடைந்த 4 பேரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி சரணடைந்தனர்.

இதே போல், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வேந்திரன் என்ற தமிழாசிரியரும், டி.என்.பி.எஸ்.சி தேர்வரான கொளத்தூரைச் சேர்ந்த பிரபாகரனும் கடந்த 14ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நான்கு பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நான்கு பேரையும் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐடி காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Exit mobile version