தர்மபுரி மாவட்டத்தில் 4 கோடியே 97 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள்

தர்மபுரி மாவட்டத்தில் 2019 – 2020ஆம் ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 4 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 ஏரிகளின் குடிமராமத்து திட்டப்பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர் வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். மழை காலங்களில் பெய்யும் மழை நீர் அதிக அளவில் சேமிக்க குடிமராமத்துப் பணிகள்  வழிவகை  செய்யும்.

Exit mobile version