4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், நாளை துவங்குகிறது

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாகவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், திங்கள்கிழமை துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மே 2ஆம் தேதி கடைசி நாளாகும்.மே 19ம் தேதி பாதிவாகும் வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்படும்.நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தொகுதிகள் அமைந்துள்ள கோவை, மதுரை, கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முழுமைக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்

Exit mobile version