சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மே 2ஆம் தேதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதி சூலூர் தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமி, மே 7ஆம் தேதி அரவக்குறிச்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்யும் துணை முதல்வர்,
மே 9ஆம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் பெ.மோகனுக்கு வாக்குச் சேகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.