இடைத்தேர்தல் நடைபெற்று வரும் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 47.86 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
நாடு முழுவதும் 59 மக்களவை தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலுர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஓட்டப்பிடாரம் தொகுதியில் 45.06 சதவீதம் வாக்குகளும், சூலூர் தொகுதியில் 48.04 வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் 47.09 சதவீதம் வாக்குகளும், அரவக்குறிச்சியில் 52.68 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
அதேபோல் மறுவாக்குப்பதிவு நடக்கும் 13 வாக்குச்சாவடி மையங்களில், 1 மணிநேர நிலவரப்படி, 51.21 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் அதிகபட்சமாக நத்தமேட்டில் 70.79 சதவீதமும், பெரியகுளத்தில் குறைந்தபட்சம் 40.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.