கனடாவை தாக்கிய டோரியன் புயலால் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 700க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உருவான டோரியன் புயலால் அந்நாட்டில் தெற்கு கரோலினா பகுதி கடும் சேதத்தை சந்தித்தது. இதனால் பெரும்பாலோனோர் வீடுகளை இழந்து தவிந்தனர். இந்நிலையில், அமெரிக்காவை கடந்த டோரியன் புயல் கனடாவின் பஹமாஸ் நகர் மற்றும் அட்லாண்டிக் கடலோரப் பகுதியை கடுமையாக தாக்கியது.
மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், பஹாமஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவாலும் மரங்கள் விழுந்துகிடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தனது ட்விட்டர் பதிவில் அட்லாண்டிக் பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தகவல்கள் பெறபட்டுள்ளதாகவும், ,மக்களின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு அட்லாண்டிக் கனடாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அணுகுண்டு தாக்குதலுக்கு இணையான பாதிப்பு என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த புயலுக்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.