கடைசி டி20 போட்டி: இந்தியாவிற்கு 213 ரன்கள் இலக்கு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஹாமில்டனில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் காலின் முனரோ அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இதனையெடுத்து இந்திய அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

Exit mobile version