உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் 3 ஆம் கட்ட கொரோனா தடுப்பு செலுத்தும் பணிகள் தொடங்கின.
நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் அறிவித்தப்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கவில்லை.
எனினும், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் இந்த பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.