116 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற மூன்றாவது கட்ட தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின
17வது மக்களவை தேர்தலின் 3வது கட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளும் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளும் இதில் அடங்கும். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி குஜராத்தின் அகமதாபாத் தொகுதியில் உள்ள ரானிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தேர்தலில் மொத்தம் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அசாமில் 81 சதவீத வாக்குகளும் திரிபுராவில் 79.36 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 78.97 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலின்போது அங்கு நடைபெற்ற வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்