கட்டாக்கில் இன்று இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது….

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில், ஏற்கனவே இந்தியா 1 வெற்றியுடனும், மேற்கு இந்திய தீவுகள் 1 வெற்றியுடனும் சம நிலையில் உள்ளன. இந்த நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர முனைப்பில் உள்ளன. இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதன் மூலம், ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 10-வது ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றிய அணியாக திகழும். அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணி முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றுள்ளதால், கடைசி ஒரு நாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி தாயகம் திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. எனவே இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணி வீரர்களும் ரன் மழை பொழிவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version