இந்தியாவுக்கு எதிரான் 3வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து வெற்றிபெற 150 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான் 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 150 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள், ஜெமீமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, கேப்டன் மித்தாலி ராஜ், ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீப்தி ஷர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அண்ணா பீட்டர்சன் 4 விக்கெட்டுகளையும், லியா தாஹூ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய பெண்கள் அணி, 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி, விளையாடிவருகிறது.

Exit mobile version