தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா என்ற அச்சத்தில், அவர்களது மாதிரிகள் புனே மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வகை தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
சர்வதேச நாடுகளில் ஒமிக்ரான் பரவல் ஆரம்பித்த காலக்கட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தாததால், கடந்த 15ம் தேதி தமிழ்நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த 22ம் தேதி ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மலேசியாவில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்ட நிலையில், அவர்களது மாதிரிகள் புனே மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 81ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே, மரபணு பகுப்பாயில் உள்ள 40 பேரின் ஒமிக்ரான் முடிவுகள் வர வேண்டியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கண் கெட்ட பின் சூர்ய நமஸ்கரம் என்பது போல், ஒமிக்ரான் பரவிய பிறகு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டு கொண்டுள்ளது.
Discussion about this post