373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் தினத்தை ஒட்டி 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். தூய்மையான 40 பள்ளிகளுக்குப் புதுமை பள்ளி விருது வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version