முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஜன் ஆரோக்கிய போஜனா திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி, சென்னை பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், இதுவரை 37 லட்சம் பேர் பயன்பெற்று உள்ளனர் என்றும் இதுவரை 7 ஆயிரத்து 200 பேர் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.