சென்னை குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை, பெசில் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா என்பவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு, வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அதிகாலையில் கீழ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 35 சவரம் நகை, எல்.இ.டி. டிவி ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.