சென்னையில் அடுத்தடுத்து வீடுகளில் 35 சரவன் நகைகள் கொள்ளை

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் 35 சவரன் நகை மற்றும் 1 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்த, வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நொளம்பூர் எஸ்.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன், வேலூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இதே போல அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் வீட்டிலும் 10 சவரன் நகை கொள்ளைபோனது. இது குறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் , சிவகுமார் ஆகிய இருவரும் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் பதுங்கி இருந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராக்கேஷ், மற்றும் ரிச்சு ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 55 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலிசார், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version