சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் சற்று குறைந்திருந்தாலும், பலி எண்ணிக்கை இரண்டாயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூகான், ஹூபே நகரங்களில் கொரோனா வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் 47 பேர் பலியான நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது ஆறுதல் அளித்துள்ளது. ஒட்டு மொத்தமாக சீனாவில் கொரேனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 870ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 625 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா நீங்கலாக உலகம் முழுவதும் 60 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.