காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்ந நீர்வரத்து படிப்படியாக சரிந்து, வினாடிக்கு ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசு, தமிழகத்திற்கு இந்த ஜூன், ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்ட நிலையில், பிலிகுண்டுலுவுக்கு ஆயிரத்து 200 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை நிலவரப்படி, பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 3 ஆயிரத்து 200 கன அடியாக உயர்ந்துள்ளது.