சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக 45 வயதிற்குட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர், பெண்கள் கோயிலுக்கு செல்ல தடை இல்லை என்றும், வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம் என்றும் ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாது என்றும் தெரிவித்தது.இதையடுத்து சபரிமலையில் 5 கட்டமாக 23 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு வந்த 12 இளம் பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். மகர விளக்கு பூஜைக்காக அடுத்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளநிலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு 45 வயதிற்குட்பட்ட 319 பெண்கள் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் அந்திரா, தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. a