காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால், பாதுகாப்புக் கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை மற்றும் சுரங்கம் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.