தமிழகம் உட்பட நாடு முழுவதும் 31 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

தமிழகத்தில் 6 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 31 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும்.

Exit mobile version