தமிழகத்தில் பருவக்காற்று வீச துவங்கியுள்ளதால் சரசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது
தற்போது தமிழகத்தில் பருவக்காற்று துவங்கியுள்ளதால் தடையற்ற மின்வினியோகம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அனல் மின் சக்தியை கொண்டு வினியோகிக்கப்படும் மின்சாரத்தை காற்றாலை மூலமாக முழுமையாக வழங்க மின்சாரத்துறை முடிவு செய்துள்ளது. சூரியமின் சக்தியின் மூலம் தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகளில் மின் உற்பத்தி காரணமாக மின் தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது, இதனால் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பதற்கு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.