மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லை பெரியார் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் நீர்வரத்து 2 ஆயிரத்து 768 கன அடியிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 9 கன அடியாக உயர்ந்துள்ளது.
முல்லை பெரியர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள விவசாயிகள் இரண்டு போக நெல் சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், அணையில் இருந்து ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அணையில் 4 ஆயிரத்து 919 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் மழை நீடிக்கும் என்பதால் பள்ளதாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.