அண்ணா பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகளில் சேராத 300 மாணவர்கள்

அண்ணா பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகளில் 300 மாணவர்கள் சேரவில்லை எனத் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தியது. அந்தக் கலந்தாய்வின் போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு உறுப்புக் கல்லூரிகளில் 300 மாணவர்கள் தங்கள் இடங்களைத் தேர்வு செய்தனர். ஆனால் அதில் தேர்வு செய்த பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேரவில்லை எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்கின் காரணமாக காலியாக உள்ள இந்தப் பொறியியல் இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படாது எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version